""ஒரு கவிராஜனின் கதை" என்கிற இந்த நூல் ஒரு வரலாற்று ஆய்வு நூலாகும். கவிராஜனாக விளங்கிய காளமேகப்புலவர் குறித்து தமிழ்கூறும் நல்லுலகம் அறியவேண்டியதும் அவசியம். இந்நூல் காளமேகத்தை நமக்கு இலகுவாக அறிமுகம் செய்கிறது.
திருவானைக்காவில் அருளாட்சி புரியும் அன்னை அகிலாண்டேஸ்வரியின் அருளால், பரிசாரகனாக இருந்தவன் கவிசாரகனாக அரசனுடன் சரியாசனம் வைக்குமளவு உயர்ந்து ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நால்வகை கவிகளைப் பொழியும் கவி காளமேகமாக ஆன அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் இயற்றிய கவிதைகளில் சில விளக்கத்துடன் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது."